மஹிந்தவின் மாபெரும் ஆர்ப்பாட்டம்! கொழும்புக்குள் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

Report Print Shalini in அரசியல்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மஹிந்த தலைமையில் முன்னெடுக்கப்பட இருந்த “ஜனபலய கொலம்பட்ட” போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி உள்ளது.

இந்த போராட்டம் விகாரமா தேவி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்டு லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி செல்கின்றது.

அத்துடன், லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் பல பகுதிகளில் இருந்தும் பேரணிகளாக வருகின்றனர்.

அந்த வகையில் கொழும்பு காலி முகத்திடலில் பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியிலிருந்தும் பேரணி ஒன்று வருகின்றது.

மேலும், போஹா சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இணைந்துகொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியும் இணைந்துள்ளது.

Latest Offers