அவமானப்பட்டு போனது ராசா குடும்பம்! ஜனபலய பேரணி குறித்து மனோ கணேசன் சாடல்

Report Print Murali Murali in அரசியல்

சோறும், போத்தலும் கொடுத்து, கொழும்புக்கு ஆட்களை அழைத்து வந்து ராசா குடும்பம் அவமானப்பட்டு போனதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் கொழும்பில் முன்னெடுத்திருந்த பேரணி தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புலியை பார்த்து பூனை வரியை போட்டுக்கொண்ட” கதையாக, அரபு நாடுகளில் நடைபெற்ற ஆட்சி மாற்ற கிளர்ச்சிகள் பற்றிய "அராபிய வசந்தம்" (Arab Spring) என்ற புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டி பார்த்துவிட்டு, சோறும், போத்தலும் கொடுத்து, கொழும்புக்கு ஆட்களை கூடி வந்து அவமானப்பட்டு போனது, ராசா குடும்பம்.

இலங்கையில் ஒப்பீட்டளவில் வெளிநாட்டுகள் போன்ற நிலைமைகள் இல்லை என்பது மனசாட்சியுள்ள எவருக்கும் விளங்கும். ஆகவே இங்கே கிளர்ச்சி செய்து "ஆட்சியை பிடிக்க" முடியாது. ஒரே வழி தேர்தல்தான்” என கூறியுள்ளார்.

Latest Offers

loading...