நாம் சொன்னதை செய்து காட்டிவிட்டோம்! மகிந்த பெருமிதம்

Report Print Murali Murali in அரசியல்

நாம் சொன்தை போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து காட்டினோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கூட்டம் தொடர்பில் அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையாக கூற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த பேரணி குறித்த தற்போது பல்வேறு தரப்பினர்களும் கருத்த வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஜனபலய பேரணி தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கதைகளை கூறுவதற்கு ஆரம்பித்துள்ளJ.

கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை.

நாம் சொன்தை போலவே மக்கள் கூட்டத்தைக் கொண்டு வந்து அரசாங்கத்திடம் காட்டினோம்.

இந்நிலையில், பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் குறித்து அரசாங்கம் ஒவ்வொரு கதையாக கூற ஆரம்பித்துவிட்டதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.