மதுபோதையில் தள்ளாடியவர்கள் குறித்து மஹிந்த அணி வெளியிட்டுள்ள விளக்கம்

Report Print Rakesh in அரசியல்

ஜனபலய மக்கள் பேரணிக்கு எதிராக எழுந்துள்ள போலி விமர்சனங்களே அதன் வெற்றியை பறைசாற்றுவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் செனானி சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நல்லாட்சி அரசை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றும் எமது முயற்சியின் முதல் படியே இந்த ஜனபலய போராட்டம்.

ஆளும் அரசின் செயற்பாடுகளினால் கீழ் மட்டம் முதல் மேல் மட்ட வர்த்தகப் பிரிவினர் வரை அனைவரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நல்லாட்சி அரசு நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இரகசியமாக சட்ட மூலங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

நாட்டை பிளவடைய செய்வது மாத்திரமின்றி தொடர்ந்து வரிகளை சுமத்தி மக்கள் மீதான சுமைகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.

ஜனபலய மக்கள் பேரணிக்காக கொழும்பு நோக்கி படையெடுத்த மக்கள் வெள்ளத்தை கண்டு அரசு அச்சமடைந்துள்ளது.

அதன் வெளிப்பாடாகவே இன்று ஜனபலய மக்கள் பேரணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மதுபோதையில் ஓரிருவர் விழுந்து கிடந்ததை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.

இலட்சக்கணக்கானவர்கள் திரண்ட ஒரு பேரணியில் ஓரிருவர் மதுபோதையில் தள்ளாடியதை போல படம் பிடித்து காட்டி இந்தப் பேரணியின் வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இவர்களின் இந்த சேறுபூசல்கள் தொடர்பில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என்று செனானி சமரநாயக்க கூறியுள்ளார்.

Latest Offers

loading...