தந்தைக்காக வந்து உயிரை விட்ட தமிழர் உள்ளிட்ட இருவரின் இறுதிச் சடங்கில் நாமல்

Report Print Shalini in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த தலைமையில் கொழும்பில் கடந்த 5ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட “ஜனபலய கொலம்பட்ட” என்ற பேரணியில் தமிழர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருந்தனர்.

ஹட்டனை சேர்ந்த 39 வயதான ஜகத் விமலசூரிய மற்றும் உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த வசந்த என்போரே இந்த பேரணியில் உயிரிழந்திருந்தனர்.

இவர்களுடைய இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டு தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இதேவேளை, மஹிந்த தலைமையிலான குழுவினர் கொழும்பை முடக்கும் வகையில் முன்னெடுத்த போராட்டத்தில் குடிபோதையில் இருந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...