சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்!

Report Print Thileepan Thileepan in அரசியல்

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அவர் கூறும் கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சார்பான கருத்துக்களாக அமைய வேண்டும்.

அவர் நினைத்த கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கருத்துக்களாக சொல்லக் கூடாது.

அதை நாங்கள் அவரிடமும் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் அவருடைய கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற கருத்தாக தான் அமைய வேண்டும்.

இதேவேளை, பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் அவர் தன்னுடைய கருத்தை சொல்வது நான்றாக இருக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers