முன்னாள் அமைச்சர்கள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்?

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கத்தை விட்டு விலகிய போதிலும் உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்குத் தொடர அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, ரீ.பி. ரட்நாயக்க, முன்னாள் பிரதி அமைச்சர்களான சுமேதா ஜயசேன, டுலிப் விஜேசேகர, நிமால் லன்சா மற்றும் தாரானாத் பஸ்நாயக்க ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த ஒன்பது பேரில் ஏழு பேர் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அரசாங்கத்தை விட்டு வெளியேறியவர்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மட்டுமே தனது உத்தியோகபூர்வ இருப்பிடத்தை ஒப்படைத்துள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு உரிய பதிலளிக்காத நிலையில் வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest Offers