திருமணத்தை செய்யுமாறு நாமலை திட்டும் மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

நல்லாட்சி அரசுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கடந்த 5ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியானது வெற்றியளிக்கவில்லை என்பதால் அந்த அணிக்குள் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு மஹிந்தவின் மூத்த மகனான நாமலிடமே வழங்கப்பட்டிருந்தது. அவரின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் நோக்கிலேயே ஒத்திகையாக இந்த பொறுப்பை மஹிந்த வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இறுதிக் கட்டத்தில் பொது எதிரணிக்குள் ஏற்பட்ட முறுகலால், சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியடைந்ததால் போராட்டம் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊடகமொன்றிட்கு நாமல் வழங்கிய நேர்காணலில், இந்த விடயம் தொடர்பில் உங்கள் தந்தை (மஹிந்த) திட்டினாரா? என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் திருமண விவகாரம் சம்பந்தமாக நாமல் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனது தந்தை என்னை அரசியல் விவகாரங்களுக்காக திட்டுவதில்லை. ஏன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை. அதை செய் என்றே திட்டுவார் என கூறியுள்ளார்.