இலங்கை அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்க முடியாது! சித்தார்த்தன்

Report Print Rakesh in அரசியல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்த தீர்மானத்தை அமுலாக்குவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், முழுமையாக இந்தத் தீர்மானம் அமுலாக்கப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை அரசு மேலதிக காலத்தைக் கோரலாம் என்று கூறப்படுகின்றது.

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதில் வழங்கிய அவர், "இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது மிகப்பெரிய தவறாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

Latest Offers