வாகரையில் பள்ளிவாசலின் அவசியம் இல்லை என்று தடுத்து நிறுத்தினேன்! நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். மன்சூர்

Report Print Nesan Nesan in அரசியல்

கிழக்குமாகாண சபையில் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் வாகரையில் பள்ளிவாசல் அமைப்பதற்கு கேட்டுக்கொண்ட போது முஸ்லிம் வாழாத பகுதியில் பள்ளிவாசல் அவசியம் இல்லை என்று தடுத்து நிறுத்தினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று இடம்பெற்ற 'கரையைத்தேடு' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

புரிந்துணர்வுகளோடு வாழும் காலத்தில் இந்துக்களில்லாத பிரதேசத்தில் கோவில்களுக்கு தேவைகிடையாது. முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் பள்ளிவாசல் தேவையில்லை.

சிங்கள மக்கள் வாழாத இடத்தில் விகாரைகளின் அவசியமேயில்லை. இதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இன்று அம்பாறையில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த பண்டைய அடயாள சின்னமாக இருந்து வருகின்ற தமிழ், முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதியிலே விகாரையை அமைப்பதற்கு சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்த அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்திலே வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சிறுபான்மை மக்களின் தலைமைகள் என்ற அடிப்படையில் எதிர்கால சமூகத்திற்கு விட்டுச் செல்கின்ற சொத்து கல்வி மாத்திரமல்ல. அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல்.

இதனை உறுதிசெய்துவிட்டு செல்ல வேண்டும், இதுவே இன்றைய தேவையும் கூட என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம். மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers