அமைச்சரவை அங்கீகரித்த ஆயுதங்களுக்கு பதிலாக வேறு ஆயுதங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

மனிதனுக்கும், யானைக்கும் இடையிலான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக அமைச்சரவை அங்கீகரித்த ஆயுதங்களை விடுத்து வேறு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக முழுமை தானியங்கி ஏகே47 துப்பாக்கிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

எனினும், சீனாவின் தயாரிப்பான எஸ்ஏஆர் - 40 துப்பாக்கிகளே தருவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயுத வன்முறைகள் அதிகரித்துள்ளநிலையில் தானியங்கி ஏகே துப்பாக்கிகளை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்குவது பாதுகாப்புக்கு பிரச்சினையாக அமைந்துவிடும்.

எனவேதான் சீன தயாரிப்பான எஸ்ஏஆர் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டதாக பெயரை குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவரை கோடிட்டு கொழும்பின் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers