மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்கான காரணம் என்ன?

Report Print Ajith Ajith in அரசியல்

2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாத காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ச முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்திமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

எனினும், 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தை முன்கொண்டு செல்லமுடியாத அளவில் பொருளாதார சிக்கலை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

எனவேதான் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை மஹிந்த நடத்தியதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers