இன்று வியட்னாமிற்கு பயணமாகும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Aasim in அரசியல்

வியட்னாமிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மேற்கொள்ளவுள்ளார்.

வியட்னாமின் தலைநகர் ஹனோயில் ஆசியான் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக உச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், பிரதமருக்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் வியட்னாமிற்கு பயணம் செய்யவுள்ளார்.

ஆசிய வலய நாடுகளில் இருந்து மட்டுமன்றி உலகின் முக்கிய பல நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை ஆசிய நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது.

மேலும், பிரதமருடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுடஹெட்டி ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.