கொழும்பில் கூடியது மகிந்தவிற்காக சேர்ந்த கூட்டமே, நாமல் சேர்த்த கூட்டமல்ல! ரோஹித அபேகுணவர்தன

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் கூட்டு எதிர்க்கட்சியின் போராட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் சக்தி போராட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ரோஹித்த...

இந்தப் போராட்டத்திற்கு நாமல் ராஜபக்ச அல்லது விமல் வீரவன்சவினால் மக்கள் அணி திரளவில்லை. மஹிந்த ராஜபக்சவிற்காகவே, மக்கள் அணி திரண்டனர்.

மக்கள் சக்தி போராட்டம் இரவு முழுவதும் நடைபெறும் என நான் ஒரு போதும் கூறவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...