மைத்திரியுடன் இணையமாட்டேன்! மகிந்த திட்டவட்டம்

Report Print Rakesh in அரசியல்

தனது அனுபவத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, ஜனாதிபதித் தேர்தலை நடத்தமாட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கின்றார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் உடன்படுகிறேன்.

எனது அனுபவத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன பாடம் கற்றுள்ளார் என்பதற்குத் தெளிவான சமிக்ஞை இதுவாகும். அவரது இந்த முடிவு விவேகமானது.

எனினும், நாங்கள் இருவரும், எதிர்காலத்தில் அரசை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும், இணைந்துகொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவுகின்றன. அவை அடிப்படையற்றவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers