கூட்டுப் படைகளின் பிரதானி மெக்ஸிக்கோவிற்கு விஜயம்

Report Print Kamel Kamel in அரசியல்

கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன மெக்ஸிற்கோவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளர்.

இன்றைய தினம் காலை அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாறு அவர் மெக்ஸிக்கோ புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மெக்ஸிக்கோவின் 208ம் சுதந்திர நினைவு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாக அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவின் பேச்சாளர் ருவான் பிரேமவீர தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சல்வடோர் சினிபியோகஸ் ஸிபிடாவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இலங்கையின் சார்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த பங்கேற்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 19ம் திகதி அட்மிரால் விஜேகுணவர்தன நாடு திரும்புவார் என பேச்சாளர் பிரேமவீர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் பங்கேற்க முடியாமை குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers