மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஜாதி மதம் அரசியல் தேவை இல்லை

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்கு சாதி, மதம், அரசியல் தேவை இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து மக்களுடைய பிரச்சினைகளை கூறியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுடைய பிரதிநிதியாக நியமித்து இருப்பதாகவும், தான் அனைத்து மக்களுக்கும் வேற்றுமை பாராமல் செய்யப்பட்டு வருவதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நியமனங்கள் வழங்கும் நேரத்தில் அனைவரும் சமம் என்ற நோக்குடன் நியமனங்களை வழங்குவதாகவும், யாருக்கும் பாகுபாடு காட்டுவது இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தான் ஆளுநர் பதவியை எடுத்ததாகவும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செய்வதற்கு வரவில்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு நம்பிக்கையாக இருப்பதாகவும், மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற தான் அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers