இந்திய ஊடகம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளமை குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது பதிலளித்துள்ள அவர்,

“இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். “அதைப்பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. “அது ஒரு சட்டரீதியான விடயமாகும்” என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers