புதிய கூட்டணிக்கு தயாராகும் அமைச்சர் மனோ கணேசன்

Report Print Steephen Steephen in அரசியல்
250Shares

அடுத்த தேர்தலில் புதிய கூட்டணியில் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சில கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி, புதிய சின்னத்தில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் புதிய கூட்டணிக்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

இந்த நிலையில், புதிய பெயரில் கூட்டணியை ஏற்படுத்தி அடுத்த தேர்தலில் போட்டியிட இந்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.