மஹிந்தவின் அழுத்தத்தால் நாமலுக்கு திருமணம்!

Report Print Rakesh in அரசியல்
750Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அடுத்த வருடம் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தந்தை தன்னை சீக்கிரம் திருமணம் முடிக்குமாறு அன்பு கட்டளை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் திருமணம் முடிக்கவுள்ளதாகவும், திருமணம் குறித்த விடயங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.