விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள்! அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Sinan in அரசியல்

எமது நாட்டில் சிறு தொழில் வியாபாரிகள் பெற்ற கடன்களை மீள செழுத்த முடியாமல் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்கம் சிறு தொழில் வியாபாரிகள் பெற்ற கடன்களை நீக்க முயற்சிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜாகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாம் மீள செழுத்த முடியாத கடன்களை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இன்று நாட்டில் பல விவசாயிகள் பெற்ற கடன்களை மீள செழுத்த முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில விவசாயிகள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அதேபோல நுண் கடன்களை பெற்ற தாய்மார்கள் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டில் அதிகரித்துள்ளது.

அண்மையில் 3,000 ரூபா கடனை மீள செழுத்த முடியாத தாயொருவர் விஷம் அருந்தியதோடு, தனது இரண்டரை வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்திருந்தார்.

இவ்வாறு நுண் கடன்களால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் நபர்களது கடன்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜாகொடி தெரிவித்துள்ளார்.