ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுப்பதன் மூலம் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ள அங்கு சென்றுள்ள பிரதமர், வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கை 70 ஆண்டுகள் செல்லுப்படியாகும் என்றாலும் தேவை ஏற்பட்டால் இரத்துச் செய்யவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையிலான எந்த செயற்பாடுகளும் இலங்யைில் நடக்காது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமருக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாக ஊடகங்களில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அப்படியான எந்த பிரச்சினைகளும் இல்லை என கூறியுள்ளார்.
அத்துடன் உலகில் முதல் முறையாக எதிரெதிரான கட்சிகள் இணைந்து நாட்டை ஆட்சி செய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.