கவலையில் சுதந்திரக்கட்சியின் செயலாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் செல்லும் போது, சிலர் ஹூ சத்தம் இட்டமை தொடர்பில் கவலையடைவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துக்கொண்டவர்களுக்கு பால் பக்கெற் வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.