இலங்கை மிக மெதுவாகவே நகர்கின்றது! ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை இடைநிலை நீதி செயற்திட்டத்தின் அர்த்தமுள்ள செயற்பாட்டை நோக்கி மிகவும் மெதுவாகவே நகர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39வது அமர்வு இன்று ஆரம்பமான நிலையில் அவர் உரையாற்றினார்.

இலங்கையில் மீண்டும் வன்முறைகள், இனங்களுக்கு இடையிலான குரோதங்கள், மரணத்தண்டனையை மீண்டும் அமுல் செய்யப்போவதாக செய்யப்பட்ட அறிவிப்பு என்பன குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மெதுவான முன்னேற்றங்களின் கீழ் தற்போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த அலுவலகம் விரைவாக செயற்பட்டு காணாமல் போனோர் விடயத்தில் உரிய தீர்வுகளை வழங்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக Michelle Bachelet தெரிவித்துள்ளார்.