பாதுகாப்புக்கான செலவீனங்கள் மறுபரிசீலனை! ஐ.நா. விசேட தூதுவர் கோரிக்கை

Report Print Aasim in அரசியல்

இலங்கை அரசாங்கம் தனது பாதுகாப்பு செலவீனங்களுக்காக பெருந்தொகை நிதி ஒதுக்குவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நா. விசேட பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா. விசேட தூதுவர் வான் பப்லோ பொஹொஸ்லெவிஸ்கி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இலங்கையானது பொருளாதாரம் மற்றும் சமாதானம் என்பவற்றில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பான மாற்றங்களில் பாதுகாப்பு செலவினங்கள் தாக்கம் ஏற்படுத்தலாம்.

இது குறித்து திறந்த கலந்துரையாடல் அவசியம்.கடந்த 2000ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்தின் கடன் தொகைகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

2017ம் ஆண்டளவில் இலங்கையின் மொத்தக் கடன் தொகை 28.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.2009ம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 86.2 வீதம் வௌிநாட்டுக் கடனாக பெறப்பட்டிருந்தது. அது 2017ம் ஆண்டு 77.4வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனாலும் 2016ம் ஆண்டு தொடக்கம் 11 வீதமாக இருந்த வரி 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான தொகை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் இருந்தே அறவிடப்படுகின்றது.

எனவே பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்காது பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாயின் பாதுகாப்புக்கான செலவீனங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. தூதுவர் வான் பப்லோ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.