சொந்த இடத்தில் வாழும் உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கவே முடியாது!

Report Print Rakesh in அரசியல்

சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமையுண்டு. அதனை நாங்கள்விடக்கூடாது. இதனை எவருமே மறுக்க முடியாது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கட்டைக்காடு, புனைத்தொடுவாய் புனித வேளாங் கன்னி மாதா ஆலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய சொந்த இடங்களில் வாழ்வதற்கு எமக்கு உரிமையுண்டு. இதனை யாரும்மறுக்க முடியாது. துணிவுடன் எங்கள் இடங்களுக்குச் செல்லவேண்டும் .

இந்த ஆலயம் கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டபோது பல தடைகள் ஏற்பட்டன எனஆலயத்தினர் என்னிடம் வந்து கலந்துரையாடினார்கள். அவர்கள் விவரங்களையும்தந்தார்கள்.

நான் அதனைக் கிழித்துப் போட்டுவிட்டு, இது எங்களுடைய இடம், இதற்குயாரும் தடைபோட முடியாது, யாரும் தடுத்தால் என்னிடம் அனுப்பக் கூறினேன். அதன்பின் யாரும் அங்கு வரவில்லை.

ஆலயத்தைச் சார்ந்தவர்களை உற்சாகப்படுத்தினேன்.இன்று ஆலயம் நிறைவுபெற்று கம்பீரமாகக் காட்சி தருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் யோ.இருதயராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் பங்குமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.