இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் கோத்தபாய

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளதாக தெரியவருகிறது.

பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டாவது தடவையாகவும் விசாரணை நடத்தும் நோக்கில் கோத்தபாய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் தொடர்பில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மீளவும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.