இந்தியாவின் நடன காலணிகள் இலங்கையில் இரு தரப்பிடம்

Report Print Ajith Ajith in அரசியல்
120Shares

ஒரே நேரத்தில் இரண்டு திருமணங்களில் நடனமாட முடியாத இந்தியா, தமது நடன காலணிகளை இலங்கையின் இரண்டு தரப்புக்களுக்கு அணிவித்துள்ளது என்று அரசியல் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

தெ ஏசியன் ஏஜ் இந்த அரசியல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான உத்தியோகபூர்வ நாடாளுமன்றக்குழுவை இந்தியா அண்மையில் புதுடில்லிக்கு அழைத்திருந்தது.

அத்துடன் அதேநேரத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமியின் ஊடாக தனிப்பட்ட அழைப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் புதுடில்லி அழைத்திருந்தது.

இந்த நிலையில் தமக்காக நடனமாடுமாறு இந்தியா, மஹிந்த ராஜபக்சவை கேட்டிருக்கலாம் என தெ ஏசியன் ஏஜ் எதிர்வு கூறியுள்ளது.

ஒருவர் இரண்டு திருமணங்களில் ஒரே நேரத்தில் நடனமாட முடியாது என்பது ஜேர்மனிய பழமொழியாகும்.