தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் இந்தியாவின் முக்கியஸ்தர்கள்

Report Print Shalini in அரசியல்

டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தால் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றிருந்தார்.

இவருக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்குச் சென்று சிறப்பாக வரவேற்பளித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை டெல்லி விமான நிலையத்தை அடைந்த நாமலை, Virat Hindustan சங்கத்தின் தலைவர் Dr.Suneel Maggo மற்றும் Virat Hindustan சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஹரிஷ் ஷர்மா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தினால் நடத்தப்படவுள்ள விழாவுக்கு மஹிந்தவை சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு வந்து அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று மஹிந்த புது டெல்லிக்கு விஜயம் செய்துள்ளதுடன், இன்று இந்தியா - இலங்கைக்கு இடையிலான உறவு குறித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

மேலும், “கொத்து கொத்தாக தமிழர்களை கொன்ற ராஜபக்சவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி” என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers