மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ச

Report Print Sinan in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டாவது தடவையாகவும் விசாரணை நடத்தும் நோக்கில் கோத்தபாய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, வாக்குமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு எந்த தகவலையும் கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்கவில்லையென எமது செய்தியாளர் கூறினார்.

மேலும், கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.