எனக்கு மனநோய் கிடையாது: மேல் மாகாண முதல்வர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஆறு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆசனத்தில் அமரும் அளவுக்கு தனக்கு மனநோய் கிடையாது எனவும் ஆசனங்கள் சம்பந்தமாக இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக தான் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆறு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாற்காலிகளை மாகாண சபைக்கு கொள்வனவு செய்யுமாறு தானோ, தனது அமைச்சரவையோ, மாகாண சபை உறுப்பினர்களோ கோரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாண சபையின் புதிய கட்டிடத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற ஆசனங்களின் விலை பற்றி அறிந்திருக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு சென்று ஆராய்ந்து அதேபோன்ற ஆசனங்களை மாகாண சபைக்கு கொள்வனவு செய்யுமாறு கூறியதே ஒரே தவறு.

நானும் எனது அமைச்சரவையும் அதிகாரிகளும் எந்த குற்றங்களையும் செய்ததில்லை. தவறான தீர்மானங்களையும் எடுத்ததில்லை. ஆறு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாற்காலிகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் எவரும் தீர்மானிக்கவில்லை.

புதிய கட்டிடத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. புதிய மண்டபத்திற்கு கதவு, ஜன்னல் என்பவற்றை அமைப்பது சாதாரணமான விடயம்.

புதிய கட்டிடத்தின் சபையின் கதவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவாகவில்லை. அடுத்த மாதத்திற்குள் சபையின் குறைகளை சரி செய்த பின்னர் ஊடகங்களுக்கு சபை திறந்து காட்டப்படும் எனவும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers