எதிர்பார்ப்புக்கான விளக்கம் முன்னாள் ஜனாதிபதியிடம் கிடைத்தது - உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும், அதற்கு முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்ட யோசனை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உதய கம்மன்பில் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் விசாரணைகள் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இந்தியாவில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கம்மன்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தனது சகோதரராக இருப்பார் என முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகம் ஒன்றிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.