ஜனாதிபதி திடீர் முடிவு! நாளை அவசரமாகக் கூடுகின்றது அமைச்சரவை

அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சரவை அந்தஸ்துடைய அனைத்து அமைச்சர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எனினும், கட்டாயம் பங்கேற்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.