சட்டத்திற்கு முரணாக செயற்படவில்லை: ரவீந்திர விஜேகுணவர்தன

Report Print Kamel Kamel in அரசியல்

சட்டத்திற்கு முரணாக செயற்படவில்லை என கூட்டுப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் உத்தியோகபூர்வ தேவைக்காகவே மெக்ஸிகோவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு மெக்ஸிகோவிலிருந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

சட்டத்தை மீறி செயற்படவில்லை, பணி நிமித்தம் மெக்ஸிகோவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். நான் வெளிநாட்டுக்கு விஜயம் செய்வது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்திருந்தேன்.

சட்டத்தை மீறி செயற்பட்டு தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதற்கு எனக்கு அவசியம் கிடையாது.

என்னுடைய வெளிநாட்டு விஜயம் பற்றி சிலர் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடும் என அட்மிரல் விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers