11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

Report Print Murali Murali in அரசியல்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக உடனடியான வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இராணுவம் மற்றும் இராணுவ தளபதி தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி இதன்போது அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers