பட்டுப்பாதை திட்டம் தொடர்பாக சீனா வெளியிட்ட கருத்து

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் அரசியலுடன் இணைந்த வகையில் தமது உதவித் திட்டங்கள் அமையவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

வியட்நாம் மாநாட்டுக்கு புறம்பாக இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது சீனா இதனை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கெங் சோங் இதனை நேற்று பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

பட்டுப்பாதை திட்டம் இலங்கைக்கும், சீனாவுக்கும் நன்மை பயக்கும் திட்டம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.