கோத்தபாய போட்டியிட்டால் பணம் கொடுப்பேன் என்கிறார் பொன்சேகா!

Report Print Tamilini in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வருவார் எனத் தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இது குறித்து சரத் பொன்சேகா தெரிவிக்கையில்,

மஹிந்த குடும்பத்தில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், அவருக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை நானே கட்டுவேன் என்றார் பொன்சேகா.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், தங்களது கட்சி அவருடன் போட்டியிட தயாரா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு,

தமது கட்சியின் தலைவர் பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நிறுத்துவார் என்றிருந்தால், கோத்தாவை வெற்றி கொள்வது சிரமமானதல்ல என பொன்சேகா குறிப்பிட்டார்.

Latest Offers