மஹிந்தவின் சகோதரர் நாட்டிலிருந்து வெளியேறிச் சென்ற காரணத்தை வெளிப்படுத்திய ஐ.தே.க

Report Print Sujitha Sri in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிச் சென்ற காரணத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாமல் தனது ஆதரவை அதிகரிப்பதற்காக எடுத்த நடவடிக்கைக்கு பசில் ராஜபக்சவால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனாலேயே அவர் நாட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இதனால் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நடத்திய எதிர்ப்பு பேரணிக்கு பசிலின் ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படும் பால் பக்கட்டுக்களை அவருடைய குழுவினரே விநியோகித்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இது தொடர்பில் பொலிஸார் கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...