அவுஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை! சட்டவிரோதமாக செல்வோருக்கு சிக்கல்

Report Print Shalini in அரசியல்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்களை தடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தடுக்கும் வேலைத்திட்டம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கான பயிற்சிகள் ஸ்ரீலங்கன் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக விமானங்களிலும், விமான நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையர்களே அதிகளவில் சட்டவிரோதமாக உள் நுழைவதாகவும் அண்மையில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் சிலரை திருப்பி அனுப்பியதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers