சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி கூறிய நாமல்

Report Print Shalini in அரசியல்

புதுடில்லியில் நடைபெற்ற விராட் இந்துஸ்தான் சங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸவை அழைத்தமைக்கு சுப்ரமணியன் சுவாமிக்கு நாமல் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

“புதுடில்லியில் நடைபெற்ற விராட் இந்துஸ்தான் சங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸவை அழைத்தமைக்கும், இந்த வெற்றிகரமான விஜயத்தை ஏற்பாடு செய்தமைக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். இந்தியாவுடனான எமது நட்பை மேலும் பலப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் இந்துஸ்தான் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers