ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்! மஹிந்தவின் சகோதரன் அறிவிப்பு

Report Print Aasim in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில் நேற்றைய தினம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த சமல் ராஜபக்‌ஸ, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவே மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அது முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக சகோதரர்களில் ஒருவர் களமிறக்கப்படலாம். அவ்வாறான சகோதரர்கள் வரிசையில் நான், கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்‌ஸ ஆகியோர் தயார் நிலையில் இருக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பது தொடர்பில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மஹிந்த ராஜபக்‌ஸ மேற்கொள்வார் என்றும் சமல் ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

Latest Offers