அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களின் வாய்களுக்கு பூட்டு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மதியம் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் உண்மையான நோக்கம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரும் பொதுவான இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மாத்திரம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

பொது அபிவிருத்தி தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், கிராம புரட்சி, எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா போன்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி பேசியதாகவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சரான தான் அறியாமல் அவரை அழைத்தது, அவரை கைது செய்வதற்கான விடயங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தமை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் கீழ் ரவீந்திர விஜேகுணரத்னவை விசாரணைக்கு அழைத்தமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் பாதுகாப்பு பிரதானிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கடும் எதிர்ப்பை முன்வைத்திருந்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி, இலங்கையில் இருந்து வெளியேறும் முன்னர், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, அவரது வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி இருக்கலாம் என சட்டத்துறையினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Latest Offers