அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு பாடம் கற்பிப்பார்கள் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.

விசாரணை செய்து முடிக்கப்பட வேண்டிய நான்கு இலட்சத்து எழுபதாயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் பழிவாங்கல்களை அடிப்படையாகக் கொண்டு விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

தற்பொழுது விசாரணை செய்யப்படும் வழக்குகளின் மூலம் சிறைக்குச் செல்வதனைத் தவிர வேறு எதுவுமில்லை. அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக அடுத்த தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவார்கள்.

நான்காயிரத்து ஐநூறு சமாதிகள் நிர்மானிக்கப்பட வேண்டிய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது தந்தைக்காக நினைவுத் தூபி அமைத்ததனை குற்றச் செயலாகக்கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு இடையில் முரண்பாடு காணப்படுவது தெளிவாக தெரிகின்றது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Latest Offers