எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்!

Report Print Steephen Steephen in அரசியல்

எரிபொருள் விலையை தீர்மானிக்க விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியதாகவும் அதனை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து எரிபொருள் விலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில் விலை சூத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா இல்லை என்பதை அடுத்த வரவு செலவுத் திட்டத்துடன் தீர்மானிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் தேசிய சந்தையில் விலையை அதிகரிக்கவும் உலக சந்தையில் விலை குறையும் போது தேசிய சந்தையில் விலையை குறைக்கவும் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் அதனை அறிமுகப்படுத்திய நாளில் இருந்து எரிபொருள் விலை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

இது சம்பந்தமான தனக்கும் கடும் விமர்சனங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers