மைத்திரி மற்றும் கோத்தாவை கொலை செய்ய சதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சுயாதீனமான விசாரணைக்குழுவை நியமிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

நாட்டை இயக்குவது பொலிஸார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அலுகோசுவாக பாதாள உலகக்குழுவினர் மாறியுள்ளனர். மக்களுக்கு பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது எனவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers