ஜனாதிபதி வேட்பாளர் மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்சவே! வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருதும் ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவின் இந்து பத்திரிகையிடம் தனது சகோதரர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கூடும் என கூறியதை இப்படி மட்டுமே அர்த்தப்படுத்த முடியும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசியலில் ஈடுபடும் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடக் கூடிய தகுதியான ஒரே நபர்.

எனது சகோதரர் போட்டியிடலாம் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதன் அர்த்தம் அரசியலில் ஈடுபட்டுள்ள தமது சகோதரர்களில் தகுதியான சகோதரர் என்பதாகும்.

பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரில் எவரும் தமது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யவில்லை.

இதனால், இவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்து கூட பார்க்க முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers