அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் இலக்கு - ஷெயான் சேமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியிடம் உரிய இலக்கும் ஐக்கியமும் இருப்பதாகவும் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்குவதே அந்த இலக்கு எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பணிகளை பசில் ராஜபக்ச தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார். அரசாங்கம் கூறிய விடயங்களுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை.

பசில் ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார். கோத்தபாய ராஜபக்ச அவரது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அதே விதமாக தொடர்ந்தும் குரல் கொடுத்துவருகிறது.

எமக்கிடையில் ஐக்கியமும் இலக்கும் இருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே அந்த இலக்கு. அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்.

எதிர்பார்ப்பு சிதைந்து போயுள்ள மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தரப்பு. அதற்கு அமைய நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.