ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த தயாராகும் ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக தனியான வேட்பாளரை நிறுத்த எண்ணியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற உலக ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட யோசனையை முன்வைத்துள்ளது.

ஆரம்பகாலத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதனை ஒழிக்கக் கூடாது எனக் கூறி வருகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாது போனால், மக்கள் விடுதலை முன்னணி உழைக்கு மக்கள் சார்பான அமைப்புகளுடன் இணைந்து தனியான வேட்பாளரை நிறுத்தும் என கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers