இலங்கை இராஜதந்திரி இத்தாலியில் திடீர் கைது

Report Print Aasim in அரசியல்

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இராஜதந்திரியொருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி விமான நிலையத்தில் கடந்த வாரம் குறித்த இராஜதந்திரியுடன் அவரது மனைவியும், மேலும் நான்கு இளம் வயதினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தோஹாவில் இருந்து இத்தாலிக்கு வருகை தந்திருந்த குறித்த இராஜதந்திரியும் அவரது மனைவியும் தங்களுடன் இருந்த இரண்டு யுவதிகளை தங்கள் புதல்விமார் என்றும் அவர்களுடன் இருந்த இளைஞர்களை வருங்கால மருமகன்மார் என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டை வைத்திருந்த நபர் 50 வயது தாண்டியவர் என்றும் அவரது மனைவிக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் கடவுச்சீட்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன் வீசாவும் பதிவாகியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களின் நடத்தைகளில் சந்தேகம் கொண்ட இத்தாலி விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட கடும் விசாரணைகளின் போது குறித்த இளம் வயதினர் சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களின் உண்மையான கடவுச்சீட்டு இராஜதந்திரியாக அறிமுகப்படுத்திக் கொண்டவரின் கைப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஆறு பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers