ஜனாதிபதி கொலைச் சதியின் பின்னணியில் ரணில்....?

Report Print Tamilini in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதி முயற்சியில் பிரதமர் ரணில் உட்பட பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக சில்வா ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அந்த சதி முயற்சியுடன் தொடர்புடைவர்களை பணி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து சதி முயற்சியில் ஈடுபடுவார்களாயின் அதனை எவரிடம் முறையிடுவது?

ஆகவே நாட்டு மக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த சதி முயற்சியுடன் தொடர்புடைவர்களை பணி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers